மதுரை, மதுரை கோட்டத்தில் பல இடங்களில் பொறியியல் பணிகள் நடந்து வருவதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16848) வருகிற 9 முதல் 14-ந் தேதி வரை மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை. வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்வது தவிர்க்கப்படும். சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். இதேபோல் நாகர்கோவில் -மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிஸ் ரெயில் (12666) வருகிற 11-ந்தேதி மட்டும் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்கப்படும். குருவாயூர் எக்ஸ்பிரஸ் குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும், கன்னியாகுமரி- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (17070) வருகிற 10-ந் தேதி மட்டும் மதுரை, மானாமதுரை, திருச்சி வழியாக இயக்கப்படும். கொடைரோடு, திண்டுக்கல் செல்வது தவிர்க்கப்படும். மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். பகுதியாக ரத்து சேலம் கோட்டத்தில் பல இடங்களில் பொறியியல் பணிகள் நடந்து வருவதால் திருச்சி -ஈரோடு பாசஞ்சர் ரெயில் (56809) ஜூலை 7, 10, 14, 18, 21-ந்தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்படும். வண்டி எண் 56106 ஈரோடு- திருச்சி பாசஞ்சர் ரெயில் ஜூலை 7, 14, 21 ஆகிய தேதிகளில் மூர்த்தி பாளையத்துடன் நிறுத்தப்படும். மூர்த்தி பாளையத்தில் இருந்து திருச்சி வரை பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (76820) வருகிற 8, 9, 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருவாரூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படும். பாலக்காடு டவுன் வண்டி எண் 16844 பாலக்காடு- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 9 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கரூரில் நிறுத்தப்படும். கரூர் முதல் திருச்சி வரை பகுதியாக ரத்து செய்யப்படும். இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்:56700) நாளை (புதன்கி ழமை) முதல் 13-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து ஆடுதுறை வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ் பிரஸ் ரெயில் (வண்டி எண்:16847) வருகிற 8-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை மயிலாடுதுறை ஆடுதுறை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது ஆடுதுறையில் இருந்து மதியம் 12.58 மணிக்கு செங் கோட்டை புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-including-the-guruvayur-express




