தூத்துக்குடி, தூத்துக்குடியில் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை போலீசார் கைது செய்தனர். உயிருக்கு போராடிய பெண் தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ம் தேதி மகள் வெளியூருக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு, போராட்டம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இதையறிந்த அவரது மகள் சத்யா மற்றும் உறவினர்கள், கொலையாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் கைது பெண் உயிரிழந்தது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதராரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கன்னியாகுமரி மாவட்டம், முட்டம், சகல புனிதர்கள் காலனியைச் சேர்ந்த லோபஸ் மகன், மீனவரான இன்னசென்ட் ரீகன்(34) என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர். கொடூர கொலை போலீசார் விசாரணையில், கிடைத்த தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட மீனவர் இன்னசென்ட்ரீகன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தூத்துக்குடியில் திருட்டு பைக்கில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் சம்பவத்தன்று திண்ணையில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் விழித்துக் கொண்டு கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், அப்பெண்ணை சுத்தியலால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கில் அதற்குரிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-in-thoothukudi-fisherman-arrested




