சென்னை, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் 2026-27 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, மாற்றித்திறனாளிகள் குறித்து தவிர்க்க வேண்டிய வார்த்தையை பயன்படுத்திவிட்டதாக அமைச்சர் அருண்ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினோம். இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது. வழக்கத்தில் இருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம். மாற்றுத்திறனாளிகள் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். அன்பு சகோதர சகோதரிகளுக்கு நமது மனப்பூர்வமான வருத்தத்தினை இதன் மூலம் பதிவு செய்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-used-a-word-that-should-have-been-avoided-minister-arunraj-expresses-regret



