'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்', படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மண்டாடி'. வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார். மண்டாடி ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த 'மண்டாடி' படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் இன்று (செப்.17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "ஒரு பக்கம் சூரிக்கு பொறுப்புகள், கடின உழைப்புகள் இருந்தாலும் அவருடைய பயணத்திற்கு காட்சிகள் ஆதாரமாக இருக்கின்றன. "எங்க அப்பா கோவக்காரர்; நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று சொன்னவர் துரை வைகோ."- கே.என் நேரு முதல் படத்தில் எங்கையோ ஒரு ஓரத்தில் இருந்தவர் இன்று இந்த இடத்தை எட்டியிருக்கிறார். சூரியின் பயணத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நம் வீட்டு பையன் என்று நினைக்கிறார்கள். மக்கள் அவரை அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். சூரி சூரி ஜெயிப்பதை அவர்கள் வீட்டில் ஒருவர் ஜெயிப்பதாக நினைத்துக் கொண்டாடுகிறார்கள். அது அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது. அவரிடம் ஒரு வெகுளித்தனம் இருக்கிறது. அவர் அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு அவர் மீதான அன்பு எப்போதும் இருக்கும்" என்று சூரியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/vetrimaaran-about-soori-in-mandaadi-successmeet




