திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்கக் கோரி சிறுமியின் தாய் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, இது தொடர்பாக மருத்துவ குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதன்படி சிறுமியை பரிசோதித்த மருத்துவ குழு, கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் கரு தொடர்ந்து வளர்ந்தால் அது சிறுமியின் மனநலத்தை பாதிக்கும் எனவும், மருத்துவ ரீதியாக கருவை கலைப்பதே தகுந்த வழி என்றும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த கேரள ஐகோர்ட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதனிடையே, சிறுமி கர்ப்பமடைந்து 30 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரது வயிற்றில் இருக்கும் சிசு உயிர் பிழைப்பதற்கு 95 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு உள்ளதாக மருத்துவ குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சிறுமியின் வயிற்றில் இருக்கும் குழந்தை உயிர் பிழைத்தால், மாநில அரசு அந்த குழந்தைக்கு தரமான பராமரிப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே சமயம், குழந்தை உயிர் பிழைக்கவில்லை என்றால், வழக்கின் விசாரணைக்காக குழந்தையின் டி.என்.ஏ., ரத்த மாதிரிகள் உள்ளிட்டவற்றை மாநில அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/kerala-high-court-allows-abortion-of-15-year-old-girl-who-became-pregnant-due-to-sexual-assault




