சென்னை, ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டணக் கொள்ளையை மத்திய மோடி அரசும் எஸ்.பி.ஐ. நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு 2005 -ல் 'No-frills' கணக்குகளாக அறிமுகப்படுத்தி, ஆகஸ்ட் 2012-ல் வழிகாட்டுதல்களை மேம்படுத்தி உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி கட்டமைப்புதான் 'BSBDA' ஜீரோ பேலன்ஸ் கணக்குகள். ஏழை எளிய சாமானிய மக்கள் நவீன வங்கிச் சேவையைப் பெற காங்கிரஸ் அடித்தளமிட்டது. இந்த BSBDA அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு இருக்காது; நம் நாட்டின் ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில்தான் மோடி அரசு கைவைக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில் 4 முறைக்கு மேல் ரொக்கம் எடுத்தாலே ரூ.15 + GST கட்டணம் வசூலிக்கிறது. மக்கள் பணப் பயன்பாட்டை விட்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் பகல்கனவு காண்கிறார்களா? ரொக்கப் பணம் பயன்பாடு உயர்வு கிராமப்புற மக்கள் இன்றும் ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். பொதுமக்களிடம் புழங்கும் ரொக்கப் பணம் 2024-25ல் 6.5%, 2025-26ல் 12.0%, தற்போது 2026-27ல் 12.9% என மீண்டும் தீவிரமாக உயர்ந்து வருகிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, ஒருபுறம் வரவிருக்கும் UPI மறைமுகக் கட்டணங்கள், மறுபுறம் ஏழை மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே அபராதம் விதிப்பது அப்பட்டமான பகல்கொள்ளை. ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டணக் கொள்ளையை மத்திய மோடி அரசும் எஸ்.பி.ஐ. நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! மக்கள் பணம் மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்; அதில் கட்டணம் என்ற பெயரில் கை வைத்து நீங்கள் அபகரிக்காதீர்கள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/fee-of-rs-15-gst-for-cash-withdrawals-exceeding-four-times-manickam-tagore-condemns-the-move




