சென்னை, தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் கணினி மேலாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு கணினி மேலாளர் பதவிக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. பணிநியமன ஆணை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில், குடும்ப அட்டைகளை அச்சிட்டு வழங்கும் பணிக்காகவும். குடும்ப அட்டை தொடர்பான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளவும். கணினி மயமாக்கப்பட்ட இத்துறையின் சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும். காலியாக உள்ள 9 கணினி மேலாளர் பணியிடங்களை நிரப்பும்வண்ணம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு இன்று தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரால் எழிலகம். இயக்குநர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. புகார்களுகான தொலைபேசி எண்களை மேலும், நெல் கொள்முதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் விவசாயிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 1800-599-3540 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இணையதளம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க 1967 அல்லது 1800-425-5901 கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். மேலும் என்ற இணையதளம் வழியாகவும் புகார்களை பதிவு செய்யலாம். குறுஞ்செய்தி நியாயவிலைக் கடையில் உள்ள அத்தியாவசியப் பொருள் இருப்பு விவரங்கள் அறிய பிடிஎஸ் (PDS) 101, நியாயவிலைக் கடையின் நிலை அறிய பிடிஎஸ் (PDS) 106 மற்றும் போலிப் பட்டியல் / அத்தியாவசியப் பொருட்கள் குறித்த கட்டண தொகை புகார் பிடிஎஸ் (PDS) 107 என்ற குறியீட்டை 8939922990 / 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பலாம். புகார் அளிக்க எண்கள் மாநில அளவிலான சேவைகளுக்கு 044-28592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்/ பதுக்கல் தொடர்பாக புகார் அளிக்க 1800-599-5950 / 96777 36557எண்களை தொடர்பு கொள்ளவும். கைரேகை பதிவு சிறப்பு முகாம் நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவுசெய்ய வரும் 02.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதுகுறித்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் தொலைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் இந்த வாய்ப்பினை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-food-supply-minister-venkataramanan-appoints-9-computer-managers




