பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அசார் (வயது 58). 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகி றார். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல், 2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தள தாக் குதல் மற்றும் 2019 புல்வாமா குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்கு தல்களுக்கு இவர் மூளையாக செயல்பட்டுள்ளார். இவரை ஐ.நா., பாது காப்பு சபை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.இந்த நிலையில் ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரைப் பற்றிய தகவல் அளிப்போருக்கு 7 மில்லியன் ரூபாய் (இந்திய மதிப்பு ரூ.70 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மத்திய புலனாய்வு அமைப் பின் (எப்.ஐ.ஏ.) ‘ரெட் புக்' தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் அவர் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/pakistan-government-announces-rs-70-lakh-reward-for-information-on-mumbai-attack-culprit




