மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. Ramayana Movie பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். உலகத்திலேயே அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட யூடி யூபர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் ரசிகர்களை நோக்கி அவர், "ஜெய் ஸ்ரீராம்" எனக் கூறிய காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்வில் ரன்பீர் கபூர் பேசுகையில், "மிஸ்டர் பீஸ்ட், இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் செய்த அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் அனைவரும் மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகிறோம். ராமாயணமும் ஸ்ரீ ராமரும் நாம் பிறந்த நாளிலிருந்தே நம் ஆழ்மனதில் மிக ஆழமாகப் பதிந்தவர்கள். ஆனால் உங்களுக்கு எளிதாகப் புரியும்படி சொல்வதானால், ராமர் என்பவர் ஒருபோதும் ஹீரோவாக இருக்க முயற்சித்தவர் அல்ல. Ranbir Kapoor & Mr. Beast அவர் முழுமையான மனிதனின் அடையாளமாகத் திகழ்பவர். தன் கடமைக்காகவும் அனைத்தையும் தியாகம் செய்தார். நமது கலாசாரத்தில் 'தர்மா' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது, அதற்கு 'கடமை' என்று பொருள். இந்தத் திரைப்படத்தின் மூலம் எங்கள் கலாசாரம், எங்கள் வரலாறு எங்கிருந்து தொடங்கின என்பதைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும்" எனப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/bollywood/mrbeast-jai-shri-ram-ranbir-kapoor-ramayana-pre-release-event




