சென்னை, சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, பொதுமக்களின் விரைவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில், உயர்மட்ட போக்குவரத்து அமைப்பு (ரோப்வே) அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வு (Detailed Feasibility Report - DFR) தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரூ.79 லட்சம் மதிப்பில். இந்த ஆய்வுப் பணிக்காக, திறந்த டெண்டர் முறையில் வாப்காஸ் லிமிடெட் (WAPCOS Limited) நிறுவனம் ரூ.79 லட்சம் மதிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, திட்டம் தொடர்பான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், முன்மொழியப்பட்ட வழித்தடத்தில் போக்குவரத்து கணக்கெடுப்பும் நிறைவு பெற்றுள்ளது. நேரில் ஆய்வு இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்டங்கள் இயக்குநர் டி. அர்ச்சுனன், உதவி மேலாளர் ராஜா சுப்பிரமணியம் ஆகியோர் கும்பக்கரை அருவி அருகே நேரில் ஆய்வு மேற்கொண்டு, ரோப்வே நிலையம் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டனர். இந்த விரிவான சாத்தியக்கூறு ஆய்வு 2026 செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/ropeway-project-for-kodaikanal-important-information-from-chennai-metro




