நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் உலகளவில் 24 நாட்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பிரேமலு’ இயக்குநரின் புதிய படம் ‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் 2-ம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நட்சத்திர பட்டாளத்துடன் உருவான படம் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியானது நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. 24 நாட்களில் ரூ300 கோடி வசூல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் உலகளவில் 24 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கேரளத்தில் மட்டும் ரூ.135 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கேரளத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் கேரள மாநிலத்தில் அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற பெயரைப் பெற்று சாதனை படைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/bethlehem-kudumba-unit-film-has-achieved-grossing-rs300-crores-in-24-days




