தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் தருவகைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 160 நாடிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். தீ விபத்து நடுக்கடலில் மீன்பிடி விசைப்படகில் மீனவர்கள் இன்று காலை சமையல் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து, அங்கிருந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள் இவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் மீன்பிடி விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமானது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு தீயில் எரிந்து நாசமானதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fishing-boat-catches-fire-mid-sea




