சகலேஷ்பூர், 23 வயது இளம்பெண் ஒருவர் கர்நாடகாவின் சகலேஷ்பூரில் உள்ள லாட்ஜில் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாட்ஜில் தங்கிய பெண் கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகாவில் உள்ள ஹெத்தூர் ஹோப்ளியின் வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 11-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் 2 இளைஞர்களுடன் வந்து தங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லாட்ஜில் அந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சகலேஷ்பூரில் உள்ள கிராபோர்ட் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து. லாட்ஜ் நிர்வாகியிடம் விசாரணை நடத்திய போலீசார், அங்கு நடந்த சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர். விசாரணை பெண்ணுடன் லாட்ஜில் தங்கியதாகக் கூறப்படும் அந்த 2 இளைஞர்கள் யார் என்றும் இளம்பெண்ணின் மரணத்தில் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறை விசாரணையின் அடிப்படையில் இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/23-year-old-bengaluru-woman-found-dead-in-sakleshpur-lodge-two-youths-suspected




