கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் பகுதியில் 5 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. 9 பேர் பலி இதனிடையே, இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். ஜனாதிபதி இரங்கல் இந்நிலையில், கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கொல்கத்தாவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/kolkata-fire-accident-president-condolences-to-families-of-victims




