திருப்பூர், தமிழகம் முழுவதும் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தேங்காய் விளைச்சல் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தேங்காயை விட இளநீர் அதிக வருவாய் தருவதால் விவசாயிகள் பலரும் இளநீர் உற்பத்தியில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் கடும் வெயில், தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. வறண்ட வானிலை தொடர்வதாலும், ஏராளமான மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் விளைச்சல் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளம் மாநிலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேங்காய் விலை மளமளவென அதிகரித்து விரைவில் புதிய உச்சத்தை தொடும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே பல விவசாயிகள் பறித்த தேங்காய்களை விற்பனை செய்யாமல் விளைநிலங்களில் குவித்து வைத்து இருப்பு வைக் கின்றனர். ஏற்றுமதி தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தேங்காயின் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.52 வரை விற்பனையாகிறது. ஒரு டன் தேங்காய் ரூ.52 ஆயிரம் வரை விற்பனையாகிறது. விரைவில் ஒரு கிலோ ரூ.70 என்ற நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காயை இருப்பு வைப்பதற்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. கூடுதல் செலவினங்கள் எதுவும் இல்லாமல் தோப்பிலேயே குவித்து வைத்து இருப்பு வைக்க முடியும். எனவே தேங்காய்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-on-yield-coconut-prices-likely-to-rise




