புதுடெல்லி 7.8 சதவீதம் ஜி.டி.பி. வளர்ச்சி மோடியின் தலைமைக்கு சாட்சி என அமித்ஷா புகழாரம் தெரிவித்து உள்ளார். நடப்பு 2026-27 நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது. இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. உலகளாவிய நிச்சயமற்ற சூழலை இந்திய பொருளாதாரம் ஆனது, மீண்டும் வெற்றி கொண்டு, 2026-27 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பிரதமர் மோடி பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைக்கான உறுதியான சான்றாக இது உள்ளது. சர்வதேச அளவில் கடுமையான புயல் வீச கூடிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டபோதும், நம்முடைய நாடு அவற்றில் இருந்து உறுதியுடன் மீண்டு வெற்றி பெறும் வகையில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக, ஒவ்வொரு குடிமகனுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/7-8-percent-gdp-growth-testament-to-modi-leadership-amit-shah




