திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் மற்றும் திருநெல்வேலி கிராமப்புற கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும். திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தச்சநல்லூர் துணை மின் நிலையத்த்தில் நாளை (10.8.2026, திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர்,செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதய நகர், செல்லபாண்டியன் சிலை முதல் ஆற்றுப்பாலம் வரை வடக்கு புறவழிச் சாலை, இளங்கோ நகர், காவேரி ஹாஸ்பிடல் பகுதி, இந்திரா காலனி, கரிமேடு பகுதி, எட்டுத்தொகை தெரு, கம்பராமாயணம் தெரு, கட்டுப்பாட்டு தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாழையூத்து மின் நிலையத்தில் நாளை (10.8.2026, திங்கள்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-14




