திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோ நகர், பரணி நகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வள்ளியூர் கோட்டம் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திசையன்விளை, களக்காடு மற்றும் கோட்டைகருங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை திசையன்விளை, மகாதேவன்குளம், கரைச்சுத்துஉவரி, கூட்டப்பனை, கூடுதாலை, குட்டம், விமனங்குடி. களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில். கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-15




