பித்தோராகார் உத்தராகண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் மகன் உயிரிழந்த சோகத்தில் தாய் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தராகண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் மேட் கிராமத்தில் வசித்து வருபவர் பூனம் ஜோஷி. இவருடைய மகன் ஜதின் ஜோஷி (வயது 14). காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் கொண்டவர். இந்நிலையில், வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை காலையில் பயிற்சிக்காக சென்ற அவர், அதனை முடித்ததும் மயங்கி தரையில் விழுந்துள்ளார். மகள் உயிரிழப்பு இதுபற்றி அறிந்ததும், பூனம் ஓடோடி சென்று மகனை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், ஜதின் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க கூடும் என தெரிகிறது. இந்த சோகத்தில் இருந்து மீளாத அவர், டாக்சியை வாடகைக்கு எடுத்து சரயு ஆற்றை நோக்கி போகும்படி ஓட்டுநரிடம் கூறினார். பின்னர் நிறுத்தும்படி கூறி, காரில் இருந்து இறங்கிய பூனம், ஆற்றில் குதித்து உயிரிழந்து விட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பு பூனமின் மகள் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், மகனும் உயிரிழந்த சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது கிராமவாசிகளிடையே அதிர்ச்சியும், சோகமும் ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/uttarakhand-mother-dies-by-suicide-jumps-into-river-after-sons-death




