சென்னை, சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு, பாலவாக்கம் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தூய்மை பணியில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று 2.40 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றினர். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஸ்வச்ச் சாகர் சுரக்ஷித் சாகர் 5.0 என்பது சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு, கடற்கரைப் பகுதிகளை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், நெகிழி பொருட்கள் இல்லாத பகுதிகளாகவும் பராமரிப்பதையும், கடல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப்பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படும் கடற்கரை தூய்மை மற்றும் விழிப்புணர்வு இயக்கமாகும். பாலவாக்கம் கடற்கரை இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு, மாநகராட்சி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்துடன் ஒருங்கிணைந்து பாலவாக்கம் கடற்கரையில் இன்று சிறப்பு கடற்கரை தூய்மை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில், நெகிழி கழிவுகள் மற்றும் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிற கழிவுகள் அகற்றப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணைய இயக்குநர் ஆஷா அஜித், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், தமிழ்நாடு கடலோர பகுதிகள் பாதுகாப்பு திட்ட இயக்குநர் சுமீஷ் சோமன், ஆகியோர் தலைமை தாங்கினர். சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்தின் துணைச் செயலாளர் பட்டாச்சாரியா மற்றும் சார்பு செயலாளர் பாஸ்கர் சீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தூய்மை பணியில் 300-க்கும் மேற்பட்டோர் இதில் ஜெருசலம் பொறியியல் கல்லூரி, கே.ஆர்.எம்.எம்.சி. கல்லூரி மாணவர்கள், மந்தன் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள். இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள், தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனம், ஆரோக்கிய பாரத் தன்னார்வ அமைப்பு, ரோட்டரி கிளப் சென்னை கேலக்ஸி, தேசிய மாணவர் படை, பல்வேறு குடியிருப்போர் நலச் சங்கங்கள், உர்பாசர் சுமீத் நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாலவாக்கம் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, கழிவுகளை முறையாக தரம் பிரித்து அகற்றுவது மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2.4 மெட்ரிக் டன் குப்பைகள் மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை தூய்மையாக பராமரிப்போம், பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழியினை ஏற்று, உறுதிமொழி கையெழுத்து பதாகையில் கையொப்பமிட்டனர். இதன் மூலம் 2.4 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, முறையாக அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முறையாக பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-2-4-metric-tons-waste-removed-palavakkam-beach




