சென்னை, மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை என்ற 60 வயது யானைக்கு, தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி ஓய்வு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவாவை சேர்ந்த அலோக் அஸ்வினி குப்தா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை என்ற யானைக்கு 57 வயதுதான் ஆகிறது என்றும், அந்த யானை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற ஐகோர்ட்டு, கோவில் யானைக்கு ஓய்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-seeking-rest-for-mayiladuthurai-temple-elephant-dismissed-by-high-court




