'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நினைவு தினம் அதன் அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பிரபு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ராஜ் மோகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நடிகர் சிவாஜி கணேசனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து நடிகர் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``சிவாஜி கணேசன் அவர்களின் 25-ம் ஆண்டு நினைவு நாளில் வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக, குடும்பத்தினரின் ஆசை வேண்டுகோளை ஏற்று இவ்விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் தம்பிக்கும் நன்றி. 2028-ம் ஆண்டு நடிகர் திலகம் அவர்களின் 100-வது பிறந்தநாள் (நூற்றாண்டு விழா) வரவிருக்கிறது. இவ்விழாவை முதலமைச்சர் தம்பி விஜய் அவரின் தலைமையில், தவெக அரசு மிகச் சிறப்பாக முன்னின்று நடத்தும் என்று பிராமிஸ் செய்திருக்கிறார். அந்நாளுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்." என்றார். அமைச்சர் ராஜ்மோகன் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ் மோகன், ``காமராஜரின் பக்தனாகவும், கலைஞரின் வாழ்நாள் நண்பனாகவும் திகழ்ந்த கலைத்தாயின் செல்வத் திருமகன் சிவாஜி கணேசன் ஒரு மாமனிதர். பாரதியாரையோ அல்லது கப்பலோட்டிய தமிழனையோ நேரில் பார்க்காத தலைமுறைக்கு, அவர்களைத் தன் நடிப்பால் கண்ணெதிரே நிறுத்தியவர் அவர். திரையுலகமும் சரித்திரமும் வியக்கும் வண்ணம், தமிழ்நாட்டின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இந்த நூற்றாண்டு விழா அமையும். இளைய திலகம் பிரபு அவர்களின் குடும்பத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது." என்றார். `கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்.' - அமைச்சர் ராஜ்மோகன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/sivaji-ganesans-25th-death-anniversary-is-being-observed-today



