சென்னை ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்து உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழு பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ரூ.30 லட்சம் அவர்களது இச்சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் பெற்றுள்ள இவ்வெற்றி, தமிழ்நாட்டின் விளையாட்டுத்திறனுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அவர்களது வெற்றி சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு சிறந்த உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளை பெற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்! என தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bronze-medal-in-squash-chief-minister-vijay-congratulates-the-sportswomen-from-tamil-nadu




