சென்னை, 242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை. இது தொடர்பாக, தொழிலாளர் உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஆய்வு சென்னை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவகங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (வட்டம் 1,2,3) ஆகியோர் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், தொழிலாளர்கள் துணை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறுவனங்களுக்கு அபராதம் தேசிய விடுமுறை நாளில் இரட்டைப்படி ஊதியம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்புடன் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனரா என்பது குறித்து 377 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 108 கடைகள்-நிறுவனங்கள், 132 உணவு நிறுவனங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 242 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/242-industrial-firms-fined-labour-welfare-department-action




