ஆமதாபாத் அரபிக்கடலில் ரூ.3 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்திய சம்பவத்தில் 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் கடலோர பகுதிகளில் போதைப்பொருட்கள் கடத்தலை கண்டறியும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. போதைப்பொருட்கள் கடத்தல் கும்பல்களை கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டு நடவடிக்கை இதன் ஒரு பகுதியாக குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு படையினருடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையினர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது லட்சத்தீவு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை மறித்து சோதனையிட்டனர். கடத்தல் முறியடிப்பு அதில், 526 கிலோ எடை கொண்ட மெத்தம்படமைன் மற்றும் ஹெராயின் போன்ற உயர்தரம் வாய்ந்த போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை ரூ.3 ஆயிரம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், பெரிய கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளது. 5 பேர் கைது இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் ஆவர். அந்த படகு, அதன் ஊழியர்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் கூட பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும். சட்டப்பூர்வ முறையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுபற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெறும் என்றும் அதில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு படை தெரிவித்து உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/rs-3-000-crore-drugs-smuggling-in-arabian-sea-5-pakistanis-arrested




