Full Article
ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெயரளவுக்கு மன்னர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பல நூற்றாண்டாக பின்பற்றி வரும் அரச குடும்ப நடைமுறைகளைப் பின்பற்றி மன்னர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், அரண்மனைகள் என பல நூறு கோடிக்கு சொத்துக்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள பாலி மாவட்டத்தில் இருக்கும் கேர்வா என்ற கிராமத்தில் ரஜபுத்திரர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களை நிர்வகிக்க அரசர் ஒருவர் பெயரளவுக்கு இருக்கிறார். சமீபத்தில் அரச குடும்ப பொறுப்பாளராக இருந்த ஹரிஷ் சந்திர ஜோதா காலமானார். அவருக்கு ஆண் வாரிசு கிடையாது. 13 வயதில் தேஜஸ்வி குமாரி என்ற மகள் மட்டும் இருந்தார். வழக்கமாக இந்த பதவிகளை ஆண் வாரிசுகள்தான் ஏற்பது வழக்கம். ஆனால் ஹரிஷ் சந்திராவிற்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் அவரது 13 வயது மகள் மன்னர் குடும்ப வாரிசாக நியமிக்கப்பட்டார். இதற்கான சடங்குகள் 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜஸ்தான் கோட்டையில் நடந்தது. பாக் கா தஸ்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் துக்கம் முடிந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக சிறுமிக்கு பிங்க் கலர் தலைப்பாகை அணிவிக்கப்பட்டது. அந்த தலைப்பாகை ஜோத்பூர்-மார்வார் அரச குடும்பத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. பெண் ஒருவர் ரஜபுத்திரர்களின் அரச குடும்ப வாரிசாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஒரு காலத்தில் ஜோத்பூர் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பாலியின் சில பகுதிகளில் பாரம்பரியமாக ஒரு குடும்ப தலைவரின் மரணத்திற்குப் பிறகு தலைமை மற்றும் பொறுப்பை மாற்றுவதைக் "பாக் கா தஸ்தூர்" குறிக்கிறது. இருப்பினும் அது வரலாற்று ரீதியாக ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் கடந்த 65 ஆண்டுகளாக இப்பதவி மாற்றுதல் நடைபெறாமல் இருந்தது. 7வது வகுப்பு படிக்கும் தேஜஸ்வி தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவார். அதோடு அப்பதவிக்கான பொறுப்புகளையும் சேர்த்து செய்வார் என்று கிராம பெரியவர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



