திருப்பதி, முலகலசெருவு அருகே விநாயகர் சிலை கரைக்கும்போது அணையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். முலகலசெருவு மண்டலம் சவுடசமுத்திரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அப்பகுதியில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. விநாயகர் சிலை சவுடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாவுஜான் (வயது 24). இவர் விநாயகர் சிலை பிர திஷ்டை செய்து வழிபாடு செய்தார். பின்னர் நேற்று முன்தினம் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக அருகில் உள்ள ஏட்டிகட்ட தண்டா பகுதியில் உள்ள பெத்தேறு அணைக்கு கரைப்பதற்காக வாலிபர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அவர்களுடன் பாவுஜானும் சென்றார். பின்னர் அணையில் விநாயகர் சிலையுடன் நீரில் இறங்கி யபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். அவருடன் சென்றவர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இரவு ஆகிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பாவுஜான் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தஸ்தகிரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/youth-drowns-in-dam-while-dissolving-ganesha-idol



