கோப்பவயது அதிகரிப்பது இயற்கையானது என்றாலும், ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இளமைத் தோற்றத்துடனும் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இளமையான தோற்றம் என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது நமது உணவு, தூக்கம், உடற்பயிற்சி, மனநிலை மற்றும் அன்றாட வாழ்க்கை முறையுடனும் நெருங்கிய தொடர்புடையது. சில எளிய, ஆரோக்கியமான பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இயற்கையான முறையில் முதுமையை தாமதப்படுத்தி, நீண்ட காலம் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வாழ உதவும் சில முக்கியமான வழிமுறைகளைப் பார்க்கலாம். கோப்புப்படம் தண்ணீர் குடியுங்கள் தினமும் குறைந்தபட்சம் 8 டம்ளர் (2.2 முதல் 3 லிட்டர்) தண்ணீர் பருகுங்கள். உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கும், சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் தண்ணீர் உதவும். சத்தான உணவு பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த சத்தான உணவை உண்ணுங்கள். நீண்டகால ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயது தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்க இவை துணைபுரியும். சன்ஸ்கிரீன் சன்ஸ்கிரீனை தினமும் பயன்படுத்துங்கள். சூரியனின் புற ஊதாக்கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள், முன் கூட்டியே தோன்றும் சுருக்கங்கள் மற்றும் சரும புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கு சன்ஸ்கிரீன் துணை புரியும். கோப்புப்படம் சர்க்கரை சர்க்கரையை அளவோடு பயன்படுத்துங்கள். அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு மற்றும் சில நீண்டகால நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம். சமூக உறவு சமூக உறவுகளை பேணுங்கள். குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் சிறந்த உறவை பேணுவது மன நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் உதவும். கற்றல் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருங்கள். மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவக்கூடும். மன அழுத்தம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள். தியானம், சுவாசப் பயிற்சி அல்லது மன அமைதி பயிற்சிகள் மன நலத்தை மேம்படுத்த வழிவகை செய்யும். தூக்கம் தினமும் 7 முதல் 9 மணி நேரம் போதுமான, தரமான தூக்கம் பெறுங்கள். ஆழ்ந்த தூக்கம் உடல் தன்னைத்தானே பழுதுபார்க்கும் செயல்முறைகளுக்கும், மனநலத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானது. உடற்பயிற்சி வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியம், தசை வலிமை மற்றும் நீண்ட ஆயுளுக்கு பயனுள்ளதாகும். அதேபோல வாரத்திற்கு குறைந்தது 2 நாட்கள் தசைகளை வலுப்படுத்தும் (ஸ்டிரென்த் டிரெய்னிங்) பயிற்சிகளை செய்யுங்கள். தசை மற்றும் எலும்பு வலிமையை பாதுகாக்க இந்த பயிற்சிகள் உதவிடும். நேர்மறை எண்ணம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இவை மனநலத்திற்கு நன்மை தரும். சிரிப்பு சிரிப்பு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவக்கூடும். மதுப்பழக்கம் மதுவைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. அதிக அளவு மது உட்கொள்வது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். விரைவாக வயது அதிகரிக்கும் தோற்றத்தை உண்டாக்கும். ஆரோக்கியமான கொழுப்பு ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேருங்கள். அவகேடோ, நட்ஸ்கள், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. உடல் தோரணை உடல் தோரணையை சீராக பராமரியுங்கள். முதுகு மற்றும் கழுத்து வலியை குறைக்கவும், உடல் சமநிலையை மேம்படுத்தவும் அது உதவும். மேற்கண்ட எளிய பழக்கங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இவற்றை ஒரே நாளில் மாற்ற முயற்சிப்பதைவிட, படிப்படியாக அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்வது சிறந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் நீண்ட காலம் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் வாழலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/habits-to-maintain-youthful-appearance-and-health




