சென்னை ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குக் இடையே காரசாரமாக பேசப்பட்டது. இதனிடையில் சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால், அனைவரும் ஆர்வமுடன் அதனை உன்னிப்பாக வருகின்றனர். இந்நிலையில் பேரவையை வழிநடத்தும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. பேரவையை உன்னிப்பாக கவனிக்கும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், ஆளுங்கட்சியை நோக்கி அவர்கள் முன்வைக்கும் கேள்விகள் உள்ளிட்டவை பற்றியும் அவர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அதனை நேரலையில் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின் - வைரமுத்து சந்திப்பு இந்தநிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அவையை சிறப்பாக நடத்தும் ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபை நேரடி ஒளிபரப்பை முக்கால் மணி நேரம் இருவரும் கண்டு கொண்டிருந்தோம். 'ஜே.சி.டி. பிரபாகர் அவையை சிறப்பாக நடத்துகிறார்' என்றார் தி.மு.க. தலைவர். "சட்டசபையின் ஆட்ட நாயகன் என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரை பேசுகின்றன' என்றேன். அப்படியா? என்றார். ஒரு அழகான காபி குடித்து முடித்து வாழ்த்தி விடை கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-is-running-the-assembly-well-praises-mk-stalin




