ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாலங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), வருகிற 13-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்-56809) கரூர் சந்திப்பு வரை மட்டுமே செல்லும். அதாவது கரூரில் இருந்து ஈரோடு வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - செங் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16845) கரூர் வரை மட்டுமே இயங்கும். அதாவது ஈரோட்டில் இருந்து கரூர் வரை பகுதி ரத்தாகிறது. இதேபோல் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16844) பாசூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி கள் நிறைவுபெற்ற பின்னர் பாசூரில் இருந்து திருச்சி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-day-changes-to-the-erodesengottai-rail-service




