சென்னை, அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என முதல்-அமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களை தகவல்களை திரட்டக்கோரி சுற்றறிக்கை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாகவும் அறிவிப்பு வெளியானது கடுமையான எதிர்ப்புகளை கிளப்பியது. அதன்பின்னர் இந்த இரண்டு அறிவிப்புகளும் திருப்பி பெறப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதாப்பேட்டையில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், சிபிஎம் சார்பில் இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தலைமை செயலாளர் தலைமையிலான கூட்டத்தின் அடிப்படையில் தான் கல்லூரி கல்வி ஆணையர் இத்தகையை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு சம்பவம் அனேகமாக எங்குமே நடந்தது இல்லை. ஆகவே தமிழ்நாடு தலைமை செயலாளரின் இந்த செயல்பாடு சட்ட விரோதமானது. வனமையான கண்டனத்துக்கு உரியது. அவர் தலைமை செயலாளராக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர். உடனடியான அவர் பதவில் இருந்து அகற்றப்பட வேண்டியவர். சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. தவறுதலாக நடந்துள்ளதாக அவர் பேசியுள்ளது ஏற்கத்தக்கது இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் உண்டு அதோடு தலைமை செயலாளர் பதவி நீட்டில் தான் உள்ளார். எனவே அவரை பொறுப்பில் இருந்து நீக்கி, திறமை வாய்ந்த அதிகாரியை பணியில் அமர்த்த வேண்டும். அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/shanmugam-questions-chief-minister-vijay




