Full Article
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ( 44). தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், சாவித்ரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது),(39) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரபு தனது ஷாப்பிங் மாலில் பணிபுரியும் பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சாவித்ரி, தனது கணவரை பலமுறை கண்டித்துள்ளார். இதனால், தம்பதியினரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து சாவித்ரி மீண்டும் கேட்டபோது, ஆத்திரமடைந்த பிரபு சாவித்ரியை ஆபாசமாகத் திட்டி, அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது உயிருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், கணவரிடமிருந்து தப்பித்த சாவித்ரி, வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் ஓடி சென்று தன்னை பூட்டிக்கொண்டு காவல் துறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். trichy தொட்டியத்தில் உள்ள சாவித்ரிவின் வீட்டிற்கு வந்த பெண் போலீஸார் உதவியுடன் மீட்கப்பட்ட சாவித்ரி, முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சாவித்ரிஅளித்த புகாரின் பேரில், தொட்டியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனக்கும் தனது குழந்தைகளுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் கணவரிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் விஜய் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறிவரும் நிலையில், இந்த வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சாவித்ரி கண்ணீர் மல்க கதறி அழுதபடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



