சென்னை, கோவில்களில் விஐபி தரிசனத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, * பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கோவிலில் விஐபிக்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும் * கோவில்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் வருகை குறித்து ஒருநாள் முன்னதாகவே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் * முக்கியப் பிரமுகர்களை கோவில் வளாகத்தினுள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி தரக்கூடாது * விஐபிக்கள் வருகையின்போது கோவிலின் புனிதத்தன்மை, மரபுசார்ந்த விஷயங்கள் பாதிக்கக்கூடாது * விஐபிக்களின் வருகை குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/vip-darshan-at-temples-department-of-charities-issues-guidelines




