நகோயா, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி நாளை முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா (நாளை) நடக்கும் முன்பே கூடைப் பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடி யாக கால்இறுதியில் கால்பதித்தன. இதன் முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி, சீனாவை சந்திக்க இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பலமாக கொட்டியது. இதனால் 'டாஸ்' போடப்படாமலேயே இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.இருப்பினும் தரவரிசை முன்னிலை அடிப்படையில் வங்காளதேச அணி (10-வது இடம்) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, தாய்லாந்தை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்த பாகிஸ் தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழை பாதிப்பால் தாமதமாக தொடங்கியதால் போட்டி 11 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 91 ரன் கள் எடுத்தது. அதிகபட்சமாக நன்னாபத் கொஞ்சரோயென்காய் 49 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானும் தட்டுத்தடுமாறியே வெற்றி பெற்றது. அந்த அணி 10.4 ஓவர் களில் 7 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-bangladesh-and-pakistan-teams-qualify-for-the-semi-finals




