புதுடெல்லி, ஒலிம்பிக்ஸ் சாம்பியன் நீரஜ் சோப்ரா (28) காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயாவில் வருகிற செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் பங்கேற்க நீரஜ் சோப்ரா உள்பட 492 விளையாட்டு வீரர்களுக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா தற்போது காயத்தினால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கணுக்காலில் காயம் இதுதொடர்பாக நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில், “பல ஆண்டுகளின் கடின உழைப்பினால், என்னால் சிறப்பான தருணத்தை லொசான் சீசனில் கொண்டு வர முடிந்தது. பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக எனது கணுக்காலில் சதைக் கிழிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக்குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த சீசனில் ஓய்வு பெறுவது நல்லதென முடிவெடிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு எனது கவனம் நலமாகி வலுவாக திரும்பி வரவேண்டும் என்பதிலேயே இருக்கிறது. தற்போதுதான் நல்ல ரிதமிற்கு வந்தேன். அதற்குள்ளாக இப்படியானது வருத்தமாக இருக்கிறது. காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி என்கிறார்கள். என் மீதான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்ஸ் 2020ல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2024ல் வெள்ளி வென்றார். 2023ல் முதல் இந்தியராக உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/neeraj-chopra-out-of-asian-games-after-ankle-injury




