‘டோரதி’ திரைப்படம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1990-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின், பிரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. “டோரதி” உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “டோரதி திரைப்படத்தின் கதையைப் படித்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். ஏனெனில், இது போன்ற படத்தில் நடிப்பது எனக்குதான் பெருமை. சில நாள்கள் வேலை செய்தாலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இளையராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள் ரிஷி, சனந்த் இருவருடனும் கொஞ்ச நாள்களே பணிபுரிந்திருந்தாலும் அவர்களுடன் நல்ல நட்புறவு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் 25 அன்று இப்படம் வெளியாகிறது. நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் நடிப்பேன் என்ற கனவில் கூட நினைக்கவில்லை நடிகர் ரிஷிகாந்த், “என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி. இந்தப் படத்திற்காக மதுரையில் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தோம். கார்த்திக் எங்களை மிகத் திறமையாக வழி நடத்தினார். இந்த படத்திற்கு எங்களுக்கு பாராட்டு கிடைத்தால் அது முழுக்க முழுக்க அவரையை சாரும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து உள்ளனர். கீர்த்தியின் நல்ல மனதிற்கு அவர் இன்னும் பல விருதுகள் பெறுவார். சனந்தும் நானும் பல வருட நண்பர்கள். நாங்கள் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. 'மொதராத்திரி' படத்திற்கு முன்பே 'டோரதி' நடித்து முடித்து விட்டேன். ராஜா சாரின் இசையில் நடிப்பேன் என்ற கனவில் கூட நினைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் நன்றி” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dorothy-film-that-will-be-talked-about-worldwide-actress-keerthy-suresh




