ராஞ்சி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இதனிடையே, இந்தியா - இலங்கை இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். இத்தொடருக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். டோனி காரில் பண்ட் இந்நிலையில், ரிஷப் பண்ட்-ஐ தனது வீட்டில் இருந்து காரில் டோனி அழைத்து சென்ற வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ரிஷப் பண்ட், டோனியுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விக்கெட் கீப்பிங், பேட்டிங் தொடர்பாக ரிஷப் பண்ட்டிற்கு டோனி ஆலோசனைகளை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. DHONI × PANT - The iconic Duo enjoying the time in Ranchi. — Johns. (@CricCrazyJohns) August 2, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/dhoni-drives-rishabh-pant-in-car-viral-video




