திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த உயர் நிலைப் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராகவும், பங்குத் தந்தையாகவும் ஜெயராஜ் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பள்ளி மாணவிகளிடம் அவர் பாலியல் ரீதியாக எல்லை மீறி நடக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைத் தனது அறைக்குத் தனியாக வரவழைத்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ், அம்மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது வீட்டிற்குச் சென்று நடந்த கொடுமைகள் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகத் தங்கள் பகுதி பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்தனர். trichy சம்பவத்தைப் கேள்விப்பட்டு கொதித்தெழுந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்திரண்டு வந்து, புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியை அதிரடியாக முற்றுகையிட்டனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்கள் திரண்டு வருவதை ஜன்னல் வழியாகக் கண்ட தலைமை ஆசிரியர் ஜெயராஜ், மக்கள் தன்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தில் பள்ளியின் பின்புற வழியாக உடனடியாகத் தப்பி ஓடி தலைமறைவானார். முற்றுகைப் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல் நிலைய போலீஸார் போராட்டம் நடத்திய மக்களிடம் பங்குத்தந்தையைக் கைது செய்வதாக உத்தரவாதம் கொடுத்ததோடு, தப்பியோடிய ஜெயராஜைத் தேடி வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/trichy-sexual-harassment-of-female-students-public-besieges-school




