தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு, 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட, கல்விளை பகுதியை சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (வயது 26) என்பவரை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். வாலிபருக்கு ஆயுள் தண்டனை இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று, மேற்சொன்ன முத்தீஸ்வரனை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/life-sentence-for-youth-who-sexually-assaulted-and-murdered-a-girl-in-sathankulam




