நகரி, தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாபாத் மண்டலத்தில் தைவாலகுடா என்ற இடத்தை சேர்ந்தவர் பர்வத ராஜ்குமார் (வயது 35). விவசாயி, 7 ஆண்டுகளுக்கு முன் சரிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தைவாலகுடாவை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக தெரிகிறது. அந்த சிறுமியை தன்னுடன் பேச வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ராஜ்குமார் துன்புறுத்தியதாக தெரிகிறது. அவரது மிரட்டலுக்கு பயந்த அந்த சிறுமியை கல்லூரிக்கு அனுப்பாமல் படிப்பையும் நிறுத்தி விட்டனர். இருந்தாலும் ராஜ்குமாரின் தொந்தரவு தொடர்ந்ததால் மே 16-ந் தேதி சிறுமியின் தாயார் போலீசாருக்கு புகார் செய்தார். இத்துடன் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. மே 26-ந் தேதி அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். ஜாமீனில் விடுதலை ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளுடன் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் ரூ.20 ஆயிரம் தனிநபர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தன்மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்ய காரணமான சிறுமி குடும்பத்தை பழிதீர்க்க ராஜ்குமார் திட்டமிட்டார். சிறுமி கொலை நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராஜ்குமார், காரில் ஷாபாத் பி.ஆர்.ஆர். மைதானம் அருகில் உள்ள சிறுமி வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் சிறுமியை தன்னோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். தடுக்க முயன்ற சிறுமியின் தாய் லட்சுமி, பாட்டி ருக்கம்மாவை வெட்டிச் சாய்த்தார். அதன் பிறகு அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகர் ஏரி அருகே இழுத்துச் சென்றார். அங்கே சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து அதன்பிறகு கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்தார். மனைவி, மகன்கள் கொலை மேலும் போக்சோ வழக்கில் சிக்கியதால் தன்னை கேவலமாக பேசிய மனைவியையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ராஜ்குமார் தைவாலகுடாவில் உள்ள மனைவி சரிதாவை (23) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார். அவர் மீது எந்த சந்தேகமும் இல்லாத சரிதா அதிகாலை அவர் கதவை தட்டியதும் திறந்தார். உள்ளே புகுந்ததும் சரிதாவை ஆத்திரத்துடன் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரிடமிருந்து தப்பித்து வெளியே ஓட முயன்ற சரிதாவை பின்தொடர்ந்து முடியை பிடித்து இழுத்து கொலை செய்தார். அத்துடன் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன்கள் பரீட்சித் (4) தைவீட்சித் (2) ஆகியோரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். சாலை மறியல் அதன் பிறகு தனது தந்தை அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நான் இந்த 6 பேரையும் கொலை செய்துவிட்டேன். நான் கூட இறந்து விடுகிறேன்" என்று கூறினார். அதுபற்றி அருண்குமார் போலீசாருக்கு தகவல் அளித்தார். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த 6 கொலைகளும் அதிர்ச்சி அளிக்கும்வகையில் கொடூரமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஷாபாத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது. குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஷாபாத் நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ராஜ்குமாரை உடனே கைது செய்யாவிட்டால் மேலும் பலரை கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் அவர்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/the-brutality-of-a-farmer-who-was-arrested-and-released-on-bail-in-a-pocso-case-and-killed-6-people



