சென்னை சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்திய நாடு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு பஸ்கள் இயக்கம் இந்த நிலையில், சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்களை (ஆகஸ்டு 14, 15, 16) முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு ஆகஸ்டு 14 மற்றும் 15-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-weekend-special-bus-services




