சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,880-க்கும் ஒரு கிராம் ரூ.13,360-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்த நிலையில், மாலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-second-time-in-a-day-whats-the-status




