போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். நேற்று தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வேறு தொடங்கியது. நாடாளுமன்றத்திற்கு வெளியே காக்ரோச் ஜனதா கட்சியின் பேரணி, நாடாளுமன்றத்திற்குள்ளே எதிர்க்கட்சிகளின் அமளி என நேற்று மத்திய அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா`இன்றுடன் உண்ணாவிரதத்தை முடிக்கிறாரா சோனம் வாங்சுக்?' - அவர் கூறும் 3 நிபந்தனைகள் என்ன? இருதரப்பின் கோரிக்கையுமே ஒன்று தான் - நீட் உள்ளிட்ட தேர்வுகளின் முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். காக்ரோச் ஜனதா கட்சியின் பேரணியை லத்தி சார்ஜ் மூலமும், எதிர்க்கட்சிகளின் அமளியை சபை ஒத்திவைப்பு மூலமும் எதிர்கொண்டது மத்திய அரசு. மேலும், காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தங்களது கோரிக்கையை கொடுத்தனர். போராட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு, போராட்டத் தரப்பு இருவருக்கும் இடையே நடந்த முதல் பேச்சுவார்த்தை இது தான். முக்கியமாக, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - தர்மேந்திர பிரதான் சந்திப்பு நடந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பு எதற்காக நடந்தது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெ என்கிற கோரிக்கை வலுத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது கவனம் பெறுகிறது. பங்குச்சந்தையில் அனைத்து முதலீட்டாளர்களும் இப்போது கவனிக்க வேண்டிய துறை இது! - நிபுணர் அட்வைஸ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/amit-shah-dharmendra-pradhan-meet-amid-neet-protest-row



