சென்னை, அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர் நடிகை ஸ்ரீலீலா. 2019-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிஸ்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், பின்னர் தெலுங்கில் நடித்த 'பகவந்த் கேசரி', 'குண்டூர்காரம்' உள்ளிட்ட படங்களால் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்திருந்த ஸ்ரீலீலாவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'தனுஷ் 55' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளம் திரைப்படங்களைப் போலவே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரது பதிவுகள் லட்சக்கணக்கான லைக்குகளையும், கருத்துகளையும் பெற்று வருகிறது. விளம்பரங்கள் மூலம் லட்சங்களில் வருமானம்? இன்ஸ்டாகிராமில் சுமார் 17 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள ஸ்ரீலீலா, இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர பதிவுக்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணம் பெறுவதாகவும், அதன் மூலம் மாதந்தோறும் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sreeleelas-social-media-earnings-a-detail-that-surprised-fans




