சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ சட்டத்தின்கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை (தொழில் அதிபர் வீரமணி தொடர்பான வழக்கு) விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊட கங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்க ளைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ சட்ட பிரிவு 23 (2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம். இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை சென்னை காவல்து றையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-warn-against-releasing-videos-related-to-the-veeramani-case




