சேலம், ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு தவெக அரசு விளம்பரம் செய்கிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைக்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சிதான். ஏழை பெண்களின் திருமணத்திற்காக அதிமுக ஆட்சியில் அம்மாவின் சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம். அந்த திட்டத்தின் பெயரையும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மூலதனமே ரீல்ஸ். ரீல். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பொறுத்தவரை, ஏழைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்குவதில் தவறு இல்லை. ஆனால், அந்த திட்டத்திற்கு எவ்வளவு பெரிய வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள். அதிமுக ஆட்சியில் தொடங்கபட்ட திட்டங்களுக்கு விளம்பரம் செய்ததில்லை. ஆனால் தற்போது ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ். ரீல். இதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/they-spend-one-rupee-and-advertise-for-one-lakh-rupees-eps-review




