பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த ரிஷப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் நட்பு அப்பெண்ணின் கணவன் வீட்டாருக்கு தெரிய வந்தது. உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி ரிஷப் குமாருடன் சோடிகுமாரி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் இரண்டு பேரும் தாமன் என்ற இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்லவில்லை. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் சோடிகுமாரியை ரிஷப் குமார் படுகொலை செய்தார். பின்னர் சோடிகுமாரியின் உடலை டிராலி பேக் ஒன்றை வாங்கி வந்து அதில் வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டுவிட்டு, ரிஷப் குமார் தப்பிச் சென்றுவிட்டார். தனியாக கிடந்த டிராலி பேக் குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அதனை திறந்து பார்த்தபோது உள்ள சோடிகுமாரியின் உடல் இருந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் தனிப்படை அமைத்து சோடி குமாரியின் காதலன் ரிஷப் குமாரை தேடி வருகின்றனர். சோடிகுமாரி என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/woman-who-left-husband-for-lover-found-dead-in-suitcase




