பீஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக நாளை மறுதினம் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனாலும், வர்த்தக மோதலை தணிக்க இருநாடுகளும் முயற்சித்து வருகின்றன. சீன அதிபர் அமெரிக்கா பயணம் இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை மறுதினம் அமெரிக்கா செல்கிறார். 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமான நிலையத்திற்கே நேரில் சென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வரவேற்க உள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பயணத்தின்போது நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுக்கூட்டத்திலும் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை நிறைவு செய்யும் ஜி ஜின்பிங் 25ம் தேதி சீனா புறப்படுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/meeting-with-trump-chinese-president-to-visit-us-day-after-tomorrow




