பெங்களூரு, பெங்களூரில் மனைவி யைக் கொலை செய்து விட்டு,அவரதுசடலத்துடன் 3 நாட்கள் வீட்டிலேயே வாழ்ந்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூர் எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள அக்ரஹாரா லேஅவுட்டில் உள்ள ஒரு காலி மைதானத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தவர் அனுசுயா பெஹாரா (28) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் சாகர் சந்திர ராவத் (32) என்பவரை கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று சம்பிகே ஹள்ளி அருகேயுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இடையே பணப்பிரச்சினை காரணமாக கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் சந்திரராவத் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். கொலையைச்செய்த பின்னர் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்த அவர், கொலையான சடலத்துடனே மூன்று நாட்கள் அதே வீட்டிற்குள் இருந்துள்ளார். பின்னர் நான்காவது நாளான ஆகஸ்டு 16 அன்று அதிகாலை நேரத்தில், மனைவியின் உடலைக் கட்டிலில் சுற்றி வீட்டின் அருகே, இருந்த காலி இடத்தில் வீசி விட்டு வீட்டைக் காலி செய்துள்ளார். அதன்பிறகு தான் வேலை பார்த்த ஓட்டலிலேயே அவர் தங்கி இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். குடும்பத்தகராறில் மனைவியை கொன்று, சடலத்துடன் 3 நாட்கள் கணவன் இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-husband-kills-wife-and-keeps-body-at-home-for-3-days-shocking-incident




