தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், முன்னாள் சபாநாயக அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், ``தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து, இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் "கல்லாப்பெட்டிகூட்டணி " என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து "மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி" என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் CM sir? ஆதவ் அர்ஜுனா - விஜய் தவெக நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் "நரித்தனத்தின் வெளிப்பாடு" என்பது நாட்டுமக்களுக்கு நன்றாகத் தெரியும் CM sir? இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை இந்திரா அவர்களால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் எதிர்த்து குரல் கொடுத்ததால் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா? ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.இராமராவ் அவர்கள் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபுநாயுடு அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல் ஆதவ்அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்து செல்கிறீர்களா CM sir?" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மிசா: `அண்ணன் ஸ்டாலின், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தலைவர்; அதை யாரும் மறுக்க முடியாது!'- திருமா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/former-dmk-speaker-appavu-has-severely-criticized-tvk-on-his-x-page




